ரேஷன் கடைகளில் இது எல்லாம் விற்க கூடாது! புற்றுநோய்க்கு வாய்ப்பு: நடிகை கவுதமி

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையான கவுதமி நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்றுநோய்க்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

நடிகையான கவுதமி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தின் விருதுநகரில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், நமது பழக்க வழக்கங்களில் உள்ள குறைபாடுகளே புற்று நோய்க்கு முக்கிய காரணம். வெள்ளையாக காணப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமானவை அல்ல, ஏனெனில் வெண்மைக்காக பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

உதாரணமாக வெள்ளை சீனி, வெள்ளை உப்பு, மைதா போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. புகைப் பிடித்தல், மது, பிளாஸ்டிக் பாட்டி லில் உள்ள தண்ணீரைக் குடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலே கண்டறிந்தால், அதனை உரிய சிகிச்சை மூலம் எளிதில் குணமாக்க முடியும், அதற்கு நானே நேரடி சாட்சி என்று கூறியுள்ளார்.

மேலும் வெள்ளை சீனி, வெள்ளை உப்பு போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் இவற்றை எல்லாம் ரேஷன் கடைகளில் விற்க கூடாது.

நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி, கடல் உப்பு போன்றவற்றை அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்