சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்துக்கு மேலும் தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த தஷ்வந்துக்கு, மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாயார் சரளாவை கொலை செய்து தலைமறைவானார்.

பின்னர் பொலிசாரால் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 46 ஆண்டுகள் சிறை மற்றும் தூக்கு தண்டனை ஏற்கனவே விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விட்டதாக தஷ்வந்த் மீது பதியப்பட்ட வழக்கில் அவருக்கு மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers