65 வயதான ஆசிரியரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்டது எதற்கு? 20 வயது மாணவியின் பதில்

Report Print Deepthi Deepthi in இந்தியா

65 வயதான தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன் என்பது குறித்து 20 வயது மாணவி பொலிசில் விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.

அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.

இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர்.

ஆனால் இருவரும் காதல் வயப்பட்டு வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றத்தொடங்கினர்.

இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்று தந்தை–மகள் என்று கூறி விடுதியில் அறை எடுத்தனர். இதற்கிடையே மகத்தின் தந்தை பொலிசில் புகார் கொடுத்ததால் செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது

பஞ்சாப் பொலிசாரின் தகவலை தொடர்ந்து ராமேஸ்வரம் பொலிசாரிடம் அவர்கள் சிக்கினர்.

வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார்.

மகத்தின் தந்தை வங்கி அதிகாரி ஆவார். ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தனர். ஆனால், மகத்தின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுபாட்டை அவருடைய குடும்பத்தினர் கண்டறிந்து எடுத்துக்கூறி சரிசெய்யாமல் விட்டதுதான் இந்த காதலுக்கு தூபம் போட்டது போல் அமைந்துவிட்டது.

தலைமை ஆசிரியர் கூறியதாவது, உடல் சுகத்துக்காக நான் மகத்தை திருமணம் செய்யவில்லை. மனைவியை இழந்த என் மீது மகத் அளவு கடந்த பாசம் வைத்துள்ளாள் என்பதுதான் காதலுக்கான காரணம் என கூறியுள்ளார்.

மாணவி மகத் கூறுகையில், சிறு வயதில் இருந்தே என் மீது அவர் காட்டிய அக்கறைதான் ஜெய்கிருஷ்ணன் மீது மதிப்பை ஏற்படுத்தியது.

நாளடைவில் என்னை அறியாமலேயே அவர் மீது அளவற்ற பாசம் வைத்துவிட்டேன். என்னுடைய காதல் தவறு என தெரிந்தாலும் நான் அவருடன்தான் வாழ்வேன். என் வாழ்க்கை அவரோடுதான், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் பஞ்சாப்புக்கு திரும்பி சென்றுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்