சொந்த தந்தையால் நடுரோட்டில் வெட்டி சாய்க்கப்பட்ட இளம்பெண் இப்போது எப்படி இருக்கிறார்?

Report Print Arbin Arbin in இந்தியா

கலப்பு திருமணம் செய்துகொண்டதால் சொந்த தந்தையாலையே கொடூரமாக வெட்டி சாய்க்கப்பட்ட இளம்பெண் மாதவி தற்போது உடல் நலம் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறி தமது சொந்த மகளையும் மருமகனையும் நடுரோட்டில் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றார் மனோகராச்சாரி என்பவர்.

இந்த தாக்குதலில் மாதவியின் கழுத்து, முகம், இடது கை உள்ளிட்ட உடல் பாகங்களில் படுகாயம் ஏற்பட்டது.

தற்போது யசோதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் மாதவிக்கு பொதுமக்கள் நிதியுதவி அளித்து அவரது சிகிச்சைக்கு உதவி வருகின்றனர்.

கடந்த வாரம் தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறி, மனோகராச்சாரி வாளால், மகள் மற்றும் மருமகனை கொலைவெறியுடன் தாக்கியுள்ளார்.

மாதவியின் கணவர் சந்தீப் முகத்தில் வெட்டுக்காயத்துடன் உயிர் தப்பினார், ஆனால் மாதவி படுகாயத்துடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

இந்த நிலையில் மாதவியை அனுமதித்துள்ள யசோதா மருத்துவமனை இதுவரை தங்களிடம் பணம் ஏதும் கேட்கவில்லை எனவும், ஆனால் மாதவி சிகிச்சை முடிந்து வெளியேறிய பின்னரே மொத்தம் எவ்வளவு செலவாகியுள்ளது என தெரியவரும் என்று தெரிவித்துள்ளார் சந்தீபின் உறவினரான வேணு.

அரசியல் கட்சி தலைவர் ஒருவரும், மாதவியின் மருத்துவ செலவை ஏற்றெடுப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை என கூறும் வேணு,

15 மருத்துவர்கள் கொண்ட குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இதுவரை பல்வேறு அறுவைசிகிச்சைகளும் நடைபெற்றுள்ளது என்றார்.

பொதுமக்களிடம் இருந்து இதுவரை 10,500 ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது எனவும், சுமார் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி எதிர்பார்ப்பதாகவும் வேணு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers