லொட்டரியில் ஒரு மில்லியன் ரூபாய் பரிசு வென்ற இளைஞர்: நண்பன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் லொட்டரியில் ஒரு மில்லியன் ரூபாய் வென்ற நண்பனை ஏமாற்றி இளைஞர் ஒருவர் பரிசை கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தின் பாலோடு பகுதியில் குடியிருந்து வருபவர் அஜினு. நிரந்தர வேலை இல்லாமல், மிகவும் அவதிப்பட்டு வந்த அஜினு எப்போதேனும் ஒருமுறை அரசு வெளியிடும் காருண்யா லொட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஆனால் இதுவரை அவர் லொட்டரியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பரிசுகள் வென்றதில்லை.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கிய லொட்டரியில் சிறிய தொகை பரிசாக பெற்றவர்கள் எண்களை தேடிய அவருக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.

நொந்துபோன அஜினு, அந்த லொட்டரி டிக்கெட்டை கசக்கி வீட்டின் ஒரு மூலையில் வீசியுள்ளார். ஆனால் அவருக்கு அந்த லொட்டரியில் இரண்டாவது பரிசான ஒரு மில்லியன் ரூபாய் வென்ற கதை தெரியாமல் போனது.

அஜினு லொட்டரியில் இரண்டாம் பரிசு வென்றுள்ளது அவரது நண்பன் அனீஷ் என்பவருக்கு தெரியவந்தது. அஜினுவிடன் இதுபற்றி விசாரித்தபோது, தமக்கு லொட்டரியில் பரிசு கிடைக்கவில்லை என்ற பதில் வந்தது.

இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திய அனிஷ், அந்த லொட்டரியை தந்திரமாக கைப்பற்றியுள்ளார். இந்த தகவல் தெரியவந்த அஜினு உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மட்டுமின்றி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை சோதனையிட்ட பொலிசார் அஜினுவின் புகார் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்