தகாத வார்த்தையால் திட்டிய தந்தை: கோவம் தலைக்கேறிய மகளின் அதிர்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த பிச்சை என்பவர், சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார்.

இவரது மகள் கற்பகவள்ளி கணவனை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்றிரவு குடிபோதையில் தனது மகளுடன், பிச்சை தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகாத வர்த்தைகளால் மகள் கற்பகவள்ளியை தந்தை பிச்சை திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கற்பகவள்ளி, இரவு தூங்கிக்கொண்டிருந்த பிச்சையின் தலையில் கிரைண்டர் கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பிச்சை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த பொலிசார் கற்பகவள்ளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்