தோழியை உயிருக்கு உயிராக காதலித்த இளம்பெண்: பெற்றோருடன் செல்ல மறுப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

கேரள மாநிலத்தில் தனது தோழியுடன் மீது கொண்ட காதலால் அவருடன் இணைந்து வாழப்போவதாக இளம்பெண் தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் அப்பெண்ணை தோழியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜா என்பவர் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், என்னுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த அருணா என்பவரை அவரது பெற்றோர் பிரித்து சென்று வீட்டில் வலுக்கட்டாயமாக அடைத்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.

ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்து இருப்பதையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து அருணாவை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது ஸ்ரீஜாவுடன் சேர்ந்து வாழவே தாம் விரும்புவதாக அருணா ஐகோர்ட்டில் தெரித்ததையடுத்து. அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers