நகை முழுவதும் படிந்திருந்த தாயின் ரத்தக்கறை: மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை, மகனே கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலவாக்கம் மணியம்மாள் தெருவை சேர்ந்தவர் 62 வயதாகும் ராணியம்மாள். இவருடைய 5 குழந்தைகளுக்கும் தற்போது திருமணம் முடிந்துவிட்டது.

ராணியம்மாளுக்கு அப்பகுதியில் சொந்தமாக இருக்கும் 4 வீடுகளில் ஒன்றில் தான் அவருடைய கடைசி மகன் பர்னபாஸ், மனைவி பரிமளாவுடன் வசித்தது வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே பர்னபாஸ், சொத்தை பிரித்து தருமாறு ராணியம்மாளுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் பர்னபாஸை வீட்டை விட்டு வெளியேறுமாறு ராணியம்மாள் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பர்னபாஸ் நேற்று அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இரவில் நன்றாக உறங்கிய பர்னபாஸ், அதிகாலை வேகமாக எழுந்து ராணியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ராணியம்மாளின் முகம் முழுவதும் சேதமடைந்துள்ளது.

அப்பொழுதும் ராணியம்மாள் உயிருடன் இருந்ததால், கொசுவிற்கு புகை மூட்டிய தீயை கொண்டு ராணியம்மாளின் முகத்தை எரித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ராணியம்மாள் உயிரிழந்ததும், அவனுடைய உடலில் அணிந்திருந்த நகைகளை வேகமாக கழற்றியுள்ளார்.

அவற்றை வேகமாக எடுத்துக்கொண்டு, இனிமேல் நமக்கு சொத்துப்பிரச்சனை வராது என மனைவியிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால் நகைகள் முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்ததால், சந்தேகமடைந்த பரிமளா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனை நடத்திய பொழுது வீட்டின் பின்புறம் ராணியம்மாள் சடலமாக கிடப்பதை கண்டறிந்துள்ளனர். அதேசமயம் பெங்களூருவிற்கு தப்பி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பர்னபாஸையும் பொலிஸார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சொத்துக்காக தான் ராணியம்மாளை கொலை செய்தேன். நகைக்காக யாரோ கொலை செய்துவிட்டார்கள் என்பதை நம்ப வைக்க தான் பெங்களூருக்கு தப்பி செல்ல முயற்சி செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers