சிறையில் நடிகர் கருணாஸ்: சந்தித்து உருக்கமாக பேசிய மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழக முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் கருணாஸை அவர் மனைவி கிரேஸ் சிறையில் சந்தித்துள்ளார்.

காவல் துறையினர் மற்றும் தமிழக முதல்வர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதற்காக அவர் கைதுசெய்யப்பட்டு, தற்போது வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.

கருணாஸ் சிறையில் அடைக்கப்பட்ட போது திண்டுக்கல்லில் இருந்த அவர் மனைவி கிரேஸ், தனது மகள் தகவல் தெரிவித்த பின்னரே கணவர் கைது செய்யப்பட்டது தனக்கு தெரியும் என கூறினார்.

இந்த நிலையில் கருணாஸ் மனைவி கிரேஸ் இன்று வேலூர் சென்றார். கருணாஸ் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு சென்ற அவர், அங்கு கருணாஸூடன் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers