ஒரு புருஷனுடன் ரொம்ப வருஷம் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா? எனது வீட்டில் பல சம்பவங்கள் இருக்கு! வனிதா விஜயகுமார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

வீட்டு விவகாரம் தொடர்பாக தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக ஊடங்களில் தனது குடும்ப ரகசியங்கள் மற்றும் தனது தந்தை பற்றிய கோபமாக பேசி வருகிறார் வனிதா விஜயகுமார்.

நான் இரண்டு கல்யாணம் செய்துகொண்டதை பெரிதாக பேசுகிறார்கள், ஆமாம் நான் பண்ணினேன் அதுக்கு இப்போ என்ன? கல்யாணம் செய்துகொண்டு ஒரு புருஷனுடன் ரொம்ப வருஷம் வாழ்பவர்கள் எல்லாம் நல்லவர்களா?

பணத்துக்காக அவரது மகன் அருண் விஜய் மற்றும் மருமகன் ஹரியின் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை வெளியே விரட்டிவிட்டார்கள்.

மேலும் தனது தாய் மஞ்சுளாவின் வீட்டில் வைத்து பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவிக்கும், போனி கபூருக்கும் இந்த வீட்டில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றபோது

ஸ்ரீதேவி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

போனி கபூர் வேறு ஒரு பெண்ணுடைய கணவராக இருந்தபோது அவரை ஸ்ரீதேவிக்கு திருமணம் செய்து வைத்தது தவறு கிடையாதா? இதுபோன்று பல தவறுகள் நடந்துள்ளன. எனக்கு திருமணம் செய்யும் போது வயது 18.

அதன்பிறகு ஏற்பட்ட பல பிரச்சனைகளால் 28 வயதில் நான் விவாகரத்து செய்தேன். அதன்பின்னர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். கணவர் என்பவர் நமக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேனே தவிர, பணத்திற்காக அல்ல என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers