நடிகர் கருணாஸின் பின்னணியில் இருப்பது யார்?

Report Print Deepthi Deepthi in இந்தியா

முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கடந்த 16ம் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு, தமிழக முதல்வர் ஆட்சியில் இருப்பது என்னால் தான், அவர் எனக்கு பயப்படுகிறார் என்று மிரட்டும் வகையில் பேசியிருந்தார்.

மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சாவல் விட்டு பேசியிருந்தார். இந்த சர்ச்சையான பேச்சுகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கருணாஸ் பேசிய வீடியோ பதிவை வைத்து அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்,

இதனைதொடர்ந்து, நுங்கம்பாக்கம் பொலிசார், கருணாஸ் முதல்வரை மிரட்டியது, மற்றும் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை மிரட்டியது எதற்காக, இப்படியெல்லாம் பேச அவரை பின் நின்று இயக்குவது யார்? மேலும் தினமும் குடிக்க மட்டுமே 1 லட்சம் செலவு செய்வதாக கூறியுள்ளார்.

அவருக்கு அவ்வளவு பணம் எப்படி வருகிறது என்பதையெல்லாம் குறித்து விசாரணை நடத்த 7 நாள் பொலிஸ் காவல் கேட்டு, எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் ரோசிலின் துரை முன்பு மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

இதேபோல், கருணாஸ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தான் எந்த குற்றமும் செய்யவில்லை, பொதுக்கூட்டத்தில் பேசியதை வைத்து வழக்கு போட்டுள்ளனர்.

பொலிசார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் என்னை கைது செய்துள்ளனர். எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். பொலிசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். இவ்வாறு ஜாமீன் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவும் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers