உயிருடன் தந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூர மகன்: அலறியபடி உயிரைவிட்ட பரிதாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கரூர் மாவட்டத்தில் 65 வயதான தந்தையை மகன் எரித்துக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசாமி என்பவரின் மகன் தங்கவேல். துப்பழக்கத்திற்கு அடிமையான தங்கவேல்,எந்நேரமும் குடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வந்துள்ளார்.

அதற்காக பணம் கேட்டு தனது தந்தை கந்தசாமியை தொல்லை செய்துள்ளார். பணம் கொடுக்காத தந்தையை அடிக்கடி தங்கவேல் அடித்து உதைத்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த தந்தை கந்தசாமியிடம் குடிக்க பணம் கேட்டிருக்கிறார் தங்கவேல். அதற்கு கந்தசாமி,'உனக்கு பொழுது போயி,பொழுது விடிஞ்சா இதே பொழப்பா போயிடுச்சு. காசு தரமுடியாது' என்று மறுத்து பேசி இருக்கிறார்.

இதனால்,தந்தை மீது கோபத்துடன் வெளியே போயிருக்கிறார் தங்கவேல்.பின்னர் திரும்பிவந்த தங்கவேல், கட்டிலில் தூங்கிகொண்டிருந்த தனது தந்தையின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.

மகன் முன்பு அலறியபடி உயிரை விட்டுள்ளார் கந்தசாமி.

தந்தையை இரக்கமே இல்லாமல் பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய கொலையாளி தங்கவேலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்