நான் என்ன விபச்சாரமா நடத்துகிறேன்? கதறும் விஜயகுமார் மகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சொத்துக்காக என்னை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்கள் என வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது.

ஏராளமான அறைகளை கொண்ட இந்தப் பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதாவுக்குப் படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

விஜயகுமார் மதுரவாயல் பொலிசில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து பொலிசார், வனிதாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

25,000 சதுர அடி அளவு கொண்ட வீட்டில் நான் வெறும் 1000 சது அடி அளவு உள்ள இடத்தில் இருந்தால் என்ன? வீட்டில் இப்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் என் தந்தை விஜயகுமார் என்னை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். ஏற்கனவே நான் 1995 களில் நடித்து நான் ஈட்டிய பொருளும் இந்த வீடு கட்டுவதற்கு உதவியுள்ளது.

அப்படியிருக்கும்போது நான் இந்த வீட்டில் இருக்க உரிமை இருக்கிறது. வீட்டிற்குள் நுழைந்த பொலிசார், என்னுடன் பணியாற்றியவர்களையும் அடித்து, என்னையும் அடித்தார்கள். நான் சொந்த வீட்டில் இருக்கும்போது பொலிசார் எப்படி எனது கன்னத்தில் அடிக்க முடியும்.

நான் விபச்சாரமா நடத்துகிறேன். தைரியம் இருந்தால் வீட்டில் விபச்சாரம் செய்கிறேன் என என்மீது வழக்கு போடட்டும். நான் ஒழுக்கமாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி, கடன் வாங்கி படம் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெண்ணை இந்த அளவுக்கு துன்புறுத்தக்கூடாது. நான் என் வாழ்க்கையில் என்ன தவறு செய்தேன். வாழ்க்கையில் சில தவறான முடிவுகள் எடுத்துள்ளேன் அது உண்மைதான். என்னுடைய பெயரில் ஒரு சொத்து கிடையாது.

நான் இரண்டு முறை விவாகரத்து செய்துகொண்டவள், ஆனால் நான் யாரிடமும் இதுவரை ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சொத்து அபகரிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்