கருணாஸ் கைது பாரபட்சமானது: விஜயகாந்த் கடும் கண்டனம்

Report Print Kabilan in இந்தியா

நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கைது குறித்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கருணாஸ் முதல்வரை அவமதித்து பேசியது, காவல்துறை அதிகாரியை மிரட்டும் வகையில் பேசியது போன்ற குற்றத்திற்காக இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவரிடம் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் அவரை வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கருணாஸின் கைது நடவடிக்கைக்கு எதிராக தலைவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இது தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.கருணாஸ் அவர்களை கைது செய்ததை கண்டிக்கிறேன். தமிழக அரசு நடுநிலையாக இருக்க வேண்டும்.

தங்களுக்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, மற்றொரு பக்கம் அச்சுறுத்தல் செய்வதற்காக இதுபோன்ற கைது நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்