இறந்த மகனை தோளில் சுமந்த தந்தை!!

Report Print Deepthi Deepthi in இந்தியா

பீஹார் மாநிலம் நலந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சிக்கி ஆம்புலன்ஸ்க்காக காத்திருந்து வராததால் இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

ஆனால் இறுதியில் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இறந்துபோக அவரது தந்தை உடலை எடுத்து செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுக்க தந்தையே பெற்ற மகனை தோளின்மேல் தூக்கி சென்ற காட்சி அங்குள்ளவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

. இறுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தவரில் ஒருவர் அவர்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச்சென்று அவரது வீட்டிற்கு கொண்டு சேர்த்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்