சொகுசுக் கார் மோசடி: சின்னத்திரை நடிகையின் கணவர் கைது

Report Print Fathima Fathima in இந்தியா

சொகுசு கார் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல தொகுப்பாளினி அனிஷாவின் கணவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நெசப்பாக்கத்தின் அம்மன் நகரை சேர்ந்தவர் அனிஷா, இவரது கணவர் சக்தி முருகன்.

தொகுப்பாளினியாக இருந்த அனிஷா, Sky Equipment என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார்.

இதேபோன்று Event Management நிறுவனமும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் தங்கள் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளுக்காக பிரசாந்த் குமார் என்பவரிடம் ரூ.37 லட்சம் மதிப்பில் சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.

இதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வந்த நிலையில், பிரசாந்த் குமார் பொலிசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் அனிஷாவை கைது செய்த பொலிசார், அவரது கணவரான சக்தி முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் சென்னை வந்துள்ளதாக வந்த தகவலையடுத்து அவரையும் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 16 சொகுசு கார்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்