பெற்ற குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்! அடுத்து செய்த திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் சேலத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல், குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்த தாய் தானும் தற்கொலை செய்துகொண்டார்.

கண்ணன் என்பவர் மின் மோட்டார்களை பழுது பார்க்கும் வேலை செய்து வந்த நிலையில், 6 மாதத்திற்கு முன்பு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

கணவர் இறந்த துக்கத்தில் இருந்த பிரேமா, தான் தற்கொலை செய்யப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்தாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பிரேமா தனது குழந்தை அஜயை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றார். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்