ஏழு தமிழர்கள் விடுதலை! நீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது- முழு விபரங்கள்

Report Print Raju Raju in இந்தியா

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் இணையதளத்தில் வெளியானது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் 7 பேரின் விடுதலை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது.

அதில், பிரிவு 161-ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது, இந்த பிரிவின் கீழ் தன்னை விடுதலை செய்ய பேரறிவாளன் கோரியிருந்தார்.

இதன்படி தன்னை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு பேரறிவாளன் அளித்த மனு செல்லும் என்றும், மனுவை ஏற்று தமிழக அரசு சுதந்திரமாக சட்டத்துக்கு உட்பட்டு முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்