எப்போதும் இதை தான் பண்ணிட்டு இருப்பா! அபிராமி குழந்தைகளை நினைத்து கலங்கும் இளம்பெண்

Report Print Fathima Fathima in இந்தியா

குன்றத்தூரில் பெற்ற பிள்ளைகளுக்கு தாயே விஷம் வைத்து கொன்ற சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.

குழந்தைகள் இறந்தது தெரியவந்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீளா துயரத்தில் ஆழ்ந்தனர்.

குழந்தைகளுடன் நெருங்கிய பழகிய மக்களால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், அந்த பொண்ணு இப்படித்தான், நடை, உடை பாவனை எதுவுமே சரி கிடையாது.

எப்போது பார்த்தாலும் மேக்கப்-வுடன் தான் இருப்பாள், ஸ்கூட்டியில் சுற்றிக் கிட்டே இருப்பாள்.

பிரியாணிகாரனை விட வேறு ஒருவருடன் தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.

குழந்தைகள் அன்பானவங்க, யார் கூடயும் ஈஸியா பழகிடுவாங்க, எனக்கு 16 வருஷமா குழந்தைங்க இல்லை.

என்கிட்ட குடுத்துட்டு போயிருந்தா கூட பத்திரமாக வளர்த்துருப்பேன், எப்பயும் சிரிச்சு விளையாடிட்டு இருந்த குழந்தைகளை சடலமா பார்த்ததும் நடுங்கி போயிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்