பேரறிவாளன் என்ற குழந்தை தன் அம்மாவிடம் சேர வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி உருக்கம்

Report Print Raju Raju in இந்தியா

அற்புதம்மாளுக்கு பேரறிவாளன் இன்னும் குழந்தை தான் எனவும் அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் எனவும் நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் முடிவை தமிழக அரசு எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.

இது குறித்து தமிழக அரசு என்ன அறிவிக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து கூறிய பிரபல நடிகர் விஜய் சேதுபதி, பேரறிவாளனை தயவு செய்து விடுதலை செய்யுங்கள், அந்த குழந்தை தனது தாயிடம் சென்று சேர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்