ஏழு பேர் விடுதலை- தமிழக முதல்வரின் திட்டம்?

Report Print Fathima Fathima in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும், ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அரசின் முடிவுக்காக தமிழர்கள் காத்திருக்கும் நிலையில், ஜெயலலதாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாம் என முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார் தமிழக சட்டத்துறை அமைச்சர்.

மூத்த அமைச்சர்களும் இதையே கூற, தீர்ப்பின் நகலை பொறுத்து முடிவெடுக்க காத்திருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.

இதற்கிடையே உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக மட்டுமல்லாமல், ஏழு தமிழர்களின் குடும்பங்களும் தம்மை சந்தித்து கோரிக்கை வைக்கட்டும்.

அப்போது தான், ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பத்துக்காகவும், ஏழு பேர் குடும்பங்களின் கண்ணீரை துடைப்பதற்காகவும் முடிவெடுத்தாக தோற்றம் வரும் என்ற திட்டமும் இருக்கிறதாம்.

எனினும் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மூத்த அமைச்சர்கள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்