பிரபல திரைப்பட நடிகை காலமானார்: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தார்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல மூத்த திரைப்பட நடிகை சுபாங்கி ஜோஷி உடல்நலக்குறைவால் தனது 72-வது வயதில் காலமானார்.

மராத்தி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் பலவற்றில் நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர் சுபாங்கி.

மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த சுபாங்கி இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.

இது குறித்து சுபாங்கியின் மருமகள் சரிதா கூறுகையில், திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாத நோயால் கடந்த வாரம் சுபாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

சுபாங்கியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers