இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்று வரும் ’பால் காய்ச்சப் போறோம்...’ பத்திரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

எப்போதுமே வித்தியாசமான சிந்திப்பதற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் புதுமனை புகுவிழா அழைப்பிதழ் ஒன்றுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மாப்பிள்ளை நாயக்கன்பட்டியில் கட்டியிருக்கும் புதுவீடு ஒன்றுக்கு செப்டம்பர் 16-ம் திகதி பால் காய்ச்சும் விழா நடைபெறவுள்ளது.

இதற்கான பத்திரிக்கையில் அந்த வீட்டை கட்டுவதற்கு பணிபுரிந்த அனைவரையும் ‘வியர்வை சிந்தி உதவிய உள்ளங்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தலைமை மேஸ்திரி, கொத்தனார்கள், உதவியாளர்கள், கட்டுமானப் பொருட்கள் உதவி, கம்பி கட்டுனர், தச்சர், மின் வல்லுனர், நீர்க்குழாய், வர்ணம், தரை அழகு, கம்பி பின்னல், வாயிற்கதவு, நிதி உதவி என அனைவரது பெயரையும் பத்திரிகையில் குறிப்பிட்டு ஆச்சர்யமூட்டி இருக்கிறார்.

இதில் நிதி உதவி என்பதில் பஜாஜ் ஃபின்சர்வ் சற்குரு பைனான்ஸ் மற்றும் பலதரப்பட்ட நகைகள் என குறிப்பிட்டு, எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வீட்டைக் கட்டியுள்ளோம் என்பதையும் உணர்த்தியுள்ளார்.

இந்த முயற்சிக்குத் தான் சமூகவலைத்தளத்தில் வரவேற்பு குவிந்து வருகிறது. மேலும், இந்தப் பத்திரிக்கையில் நான், என் அம்மா, மனைவி, பொண்ணு என்று குறிப்பிட்டு இருக்கிறாரே தவிர அவரது பெயரைக் குறிப்பிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்