4 வயது குழந்தைக்கு எமனாக மாறிய தூக்கம்: கடைசி நிமிடத்தை கண்கலங்கிய படி விளக்கிய பக்கத்து வீட்டு பெண்

Report Print Santhan in இந்தியா

சென்னை, சூளைமேட்டில் உள்ள சித்ரா அவென்யூவில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர்கள் கோபால், கீதா தம்பதி.

இவர்களுக்கு 4 வயதில் சாரதா என்கிற மகளும், 2 வயதில் ஈஷன் என்கிற மகனும் உள்ளனர்.

ப்ரி கேஜி படிக்கும் சாரதா, நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், தூக்கம் வருகிறது என்று கூறியதால், மகளை தூங்க வைத்துவிட்டு, கீதா கீழ் வீட்டில் இருப்பவர்களிடம் சென்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது தூக்கம் தெளிந்த குழந்தை தூக்க கலக்கதுடன் அம்மாவை தேடிய போது, அம்மா கீழே இருப்பதை அறிந்து மம்மி..மம்மி என்று அழைத்திருக்கிறாள்.

ஆனால் அம்மா திரும்பி பார்க்காததால், பால்கனியில் இருக்கும் கம்பி மீது ஏறி அழைக்க முற்பட்டபொது, எதிர்பாரதவிதமாக கால் தவறி ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்நிலையில் இது குறித்து பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் ஒருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் அந்த குழந்தை அடிக்கடி வந்து விளையாடுவாள்.

அவ்வளவு அழகா இருப்பாள், தம்பி மேல் அவளுக்கு அவ்வளவு உயிர் இருக்கும். தம்பி பால்கனி பக்கம் போனாலே, போகாதே என்று பிடிச்சு இழுப்பா, அப்படிப்பட்டவள் குழந்தை, இப்படி இறந்துட்டாள் என்ற போது கண்கலங்குகிறது.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது கூட, தூங்கிட்டு சாயந்திரம் விளையாட வர்றேன் ஆன்ட்டி'னு சொன்னா. ஆனா, அது கடைசி தூக்கமா, அந்தத் தூக்கமே எமனா ஆகப்போகுதுன்னு தெரியாமல் போச்சு என்று மீண்டும் கண்கலங்கியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்