இறந்து கிடந்த பிரபல நடிகரின் சடலத்துடன் செல்பி எடுத்த மருத்துவ ஊழியர்கள்: வெளியான அதிர்ச்சி புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல நடிகரும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வரின் மகனுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா 29 ஆம் திகதி கார் விபத்தில் உயிரிழந்தார்.

நந்தமுரி ஹரிகிருஷ்ணா, தன் தந்தையைப் போலவே அரசியலிலும் சினிமாவிலும் பட்டையைக் கிளப்பினார்.

ரசிகர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றபோது தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். சீட் பெல்ட் அணியாமல், அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததே அவரின் மரணத்துக்கு முக்கிய காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கார் விபத்தில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இவரது சடலத்துடன் அங்கு பணியாற்றிய செவிலியர்கள் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் ஒரு நடிகராக இருந்தாலும், சடலத்துடன் செல்பி எடுப்பது மனிதாபிமானமற்ற செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்