திருமணமான சில மாதத்தில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை: கதறி அழுத கர்ப்பிணி மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டில் திருமணமான 6 மாதத்தில் மனைவி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி கிராப்பட்டியில் சிறப்பு காவல் படை பொலிஸ்காரராக பணியாற்றியவர் சேதுபதி (24).

இவருக்கு இந்திரா (21) என்ற பெண்ணுடன் 6 மாதத்துக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில், அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்நிலையில் இந்திராவுக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார் சேதுபதி.

அங்கு வந்த இந்திராவின் குடும்பத்தார், தனியார் மருத்துவமனையில் சேர்க்காமல் ஏன் அரசு மருத்துவமனையில் சேர்த்தீர்கள் என சேதுபதியுடன் சண்டை போட்டுள்ளனர்.

இதன் பின்னர் வீட்டுக்கு சென்ற சேதுபதிக்கு இந்திரா போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

சேதுபதி வீட்டருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது சேதுபதி தூக்கில் சடலமாக தொங்கினார்.

இது குறித்து பொலிசார் விசாரித்து வரும் நிலையில், மனைவி குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனையில் சேதுபதி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கணவரின் உடலை பார்த்து மனைவி இந்திரா கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்