திருமணமான மகளுக்கு சீர்வரிசை கொடுத்து திரும்பிய போது தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! அதிர்ச்சியில் மணவீட்டார்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் சீர்வரிசை கொடுத்துவிட்டு வீடு திரும்பிய போது வேன் சாலை விபத்தில் சிக்கியதால் மணமகளின் தந்தை உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.

இவருடைய மகள் ஈஸ்வரிக்கு திருமணம் முடிந்த நிலையில் மறுவீடு அழைப்புக்காக மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு சிவகளை கிராமத்தில் உள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு தன் உறவினர்களுடன் சென்றுள்ளார்.

மணமகளை விட்டுவிட்டு உறவினர்களுடன் மீண்டும் வீடு திரும்புவதற்காக வேனில் சென்ற போது, வேன் கட்டுப்பாட்டை இழந்ததால், அழகியபாண்டிபுரம் அருகே உள்ள சுப்பையாபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியுள்ளது.

இந்த விபத்தின் காரணமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அத்துடன் மணமகளின் தந்தை முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் செந்தில்முருகன், ஆறுமுகம், லெட்சுமி அம்மாள் மற்றும் 4 வயது சிறுமியான இளவரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து மணமகனின் வீட்டில் மணப்பெண்ணை விட்டுத் திரும்பியபோது மணமகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் மணவீட்டாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்