சிகிச்சைக்காக வந்த பெண்ணின் மூக்குக்கு தையல் போட்ட பிணவறை ஊழியர்: வீடியோ வெளியானது

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் மூக்கு உடைந்த பெண்ணிற்கு பிணவறை ஊழியர் தையல் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பிணவறை ஊழியர் சிகிச்சை அளிக்கும் காட்சி வெளியாகியுள்ளது.

அதில், வேன் விபத்தில் காயம் அடைந்த பெண் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மருத்துவர் சிகிச்சையளிக்க மறுக்கிறார்.

இதையடுத்து வலியால் துடித்தவருக்கு பிணவறை ஊழியர் கதற கதற முதலுதவி செய்வது போல வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ வைரலான நிலையில் குறித்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்