பல இளைஞர்களை ஏமாற்றி நடுத்தெருவில் நிற்கவைத்த மோசடி பெண்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்றிய பெண் மீது பொலிசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த லிண்டோ ஆண்டனி என்ற இளைஞரிடம், கோவையைச் சேர்ந்த மல்லிகாமனி என்ற பெண் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.4 லட்சம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து மல்லிகாமனியிடம் இருந்து பணி உத்தரவு கடிதத்தை வாங்கிய ஆண்டனி, பின்னர் அது போலி கடிதம் என்பதை உணர்ந்தார்.

இதேபோல் பலரிடம் மல்லிகாமணி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

மோசடிக்கு உடந்தையாக பிரபாகரன், வித்யாஸ்ரீ, சாரா என்போரும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்