ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்த இரண்டு ஆண்கள்: கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் மும்பையில் ஓரினச்சேர்க்கையில் இருவர் ஈடுபட்ட நிலையில் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26-ஆம் திகதி அங்குள்ள ரயில் நிலைய தண்டவாளம் அருகில் 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினார்கள்.

அங்குள்ள சிசிடிவி கமெராவை ஆய்வு செய்ததில் இறந்த நபருடன் வேறு நபர் அந்த பகுதிக்கு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சலீம் அலி அன்சாரி (28) என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

அப்போது தான் இறந்தவரின் பெயர் மிஷ்ரா என தெரியவந்தது.

அன்சாரி அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும் மிஷ்ராவும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டோம்.

நான் மிஷ்ராவிடம் 26000 கடன் வாங்கிய நிலையில் அதை அவர் திரும்ப கேட்டார்.

பணத்தை தரவில்லையெனில் ஓரினச்சேர்க்கை விவகாரத்தை வெளியில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார்.

இது வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என கருதி அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அன்சாரியிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்