பிணமாக தொங்கிய மாணவன்: தன் தற்கொலையை தானே செய்தியாக வெளியிட்ட பரிதாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது தற்கொலை செய்தியை பதிவிட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் என்ற கல்லூரி மாணவர் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் கூறியுள்ளார்.

ராசிப்பட்டி ஊருக்குள் உள்ள இரண்டு குடும்பங்கள் தான் தனது தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டுவிட்டு அவரது தற்கொலையை செய்தியாக வெளியிடுவது போல குறிப்பிட்டிருந்தார்.

இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இவரது நண்பர்கள் ராமரை தேடியுள்ளனர்.

மலைப்பகுதியில், ராம‌ர் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுக்க, நள்ளிரவில் ராமரின் உடல் மீட்கப்பட்டது.

கிராம‌ம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது மகனின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுவது பார்ப்பதற்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்