திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பெண் திரைப்பட இயக்குனர்: அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல திரைப்பட இயக்குனர் ஜெயா கடுமையான மாரடைப்பால் தனது 54-வது வயதில் மரணமடைந்தார்.

தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள ஜெயா பத்திரிக்கையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை ஏற்பட்ட கடுமையான மாரடைப்பால் ஜெயா உயிரிழந்தார்.

ஜெயாவின் கணவர் ராஜூ சினிமாவில் மக்கள் தொடர்பு அதிகாரியாக உள்ள நிலையில் ஜெயாவின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்