மந்திரம் ஓதிக் கொண்டிருந்த மந்திரவாதியிடம் அந்த பெண் என்ன சொன்னார்? சிசிடிவியில் சிக்கிய ஆதாரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மந்திரவாதி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நாடகமாடுகிறாரா என்று பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சைய்யது பஸ்ருதீன் (63). மந்திரவாதியான இவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனது கட்டிடத்தில் குறி சொல்லும் தொழில் செய்து வந்தார்.

கடந்த 27-ஆம் திகதி திருவல்லிக்கேணியில் உள்ள டி.ஹெச். சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் தரைத்தளத்தில் சையது பஸ்ரூதீன் அமர்ந்து மந்திரம் ஓதிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்டோர் நின்று கொண்டிருந்த நிலையில், திடிரென்று அங்கு வந்த இளம் பெண் ஒருவர், தான் மூடியிருந்த துணியை அகற்றி அவரிடம் ஏதோ உருது மொழியில் பேசியுள்ளார்.

அதன் பின் திடீரென்று தான் பையில் வைத்திருந்த வேதிப் பொருளை தூக்கி மந்திரவாதி மீது வீசினார். இதனால் அவரது உடலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிசார் இது குறித்து அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை சோதனை செய்துள்ளனர், அப்போது இந்த சம்பவத்தை செய்தது

நவீன்தாஜ் என்ற பெண் என்பது தெரியவந்தது.

அந்த பெண்ணின் உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த 11 மணி நேரத்தில் நவீன் தாஜை அவரது கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனால் இந்த கொலை சம்பவத்தில் இருந்து தப்பிப்பதற்காக இப்படி ஒரு நாடகம் நடத்தப்படுகிறதா? அல்லது உண்மையிலே அந்த பெண் மனநலம் பாதிக்கபப்ட்டவரா என்பது குறித்து அறிவதற்காக பொலிசார், நவீன்தாஜின் மனநலம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.

அந்த அறிக்கை கிடைத்த பிறகே நவீன்தாஜின் மனநலம் குறித்து தெரியவரும். இந்தக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்