உயிரோடு மண்ணுக்குள் புதைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்: திடுக்கிடும் சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் உத்தரகாண்டில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் மண்ணில் புதைத்து இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெஹரி மாவட்டத்தில் கன மழை பெய்த நிலையில் அங்குள்ள வீட்டில் 8 பேர் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் அனைவரும் உயிரோடு மண்ணில் புதைந்தார்கள்.

இதில் 10 வயது சிறுமி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

மீதி இருந்த 7 பேரும் பரிதாபமாக இறந்தார்கள்,

இறந்தவர்களின் பெயர்கள் மோர் சிங் (32), சஞ்சு தேவி (30), லட்மி தேவி (25), ஹன்ச தேவி (28), அடுல் (8), ஆஷிஸ் (10), சுவாதி (3) என தெரியவந்துள்ளது.

இதில் ஹன்ச தேவி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்