திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபரை மணக்க முடியாமல் ஏங்கிய மணப்பெண்: இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியிருந்த இளம்பெண் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட வாலிபரை ஒருவழியாக திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே அட்டிஒலே கிராமத்தை சேர்ந்த குசுமா என்ற பெண்ணுக்கும், தனஞ்செய் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது

இருவருக்கு நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் வெள்ளம்-நிலச்சரிவு காரணமாக குசுமாவின் வீடு இடிந்தது.

இதனால் குசுமாவும் குடும்பத்தாரும் நிவாரண முகாமில் தஞ்சமடைந்தனர்.

வெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்த குசுமா தனக்கு நிச்சயிக்கப்பட்ட தேதியில் திருமணம் நடைபெறுமா? என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார்

ஆனாலும் பணம் இல்லாமல் அவர்கள் தவித்தனர்.

இதற்கிடையே குடகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட குசுமா, மஞ்சுளா, ரஞ்சிதா உள்பட 3 பெண்கள் பரிதவித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதை அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி அரசு சார்பில் 3 பேரின் திருமண செலவுக்காக தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினார்.

அதைதொடர்ந்து நேற்று குசுமா- தனஞ்செய் ஆகியோருக்கு மடிகேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தில் முகாம்களில் தங்கியிருந்த மக்களும் கலந்து கொண்டனர்.

திருமணம் நடந்த மகிழ்ச்சியில் குசுமா ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்