கேரளாவுக்கு இதுவரை நிதியாக எவ்வளவு கோடி குவிந்துள்ளது தெரியுமா? அம்பானி வழங்கிய 21 கோடி

Report Print Deepthi Deepthi in இந்தியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் அதிக அளவில் நிவாரண தொகை குவிந்துள்ளது.

கேரள வரலாற்றிலேயே 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித்தீர்த்த மழை, கடுமையான சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

வெள்ளப் பாதிப்பால் ரூ.20,000 கோடிவரை சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.2,600 கோடி தேவைப்படுவதாகவும் மத்திய அரசிடம் கேரள அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடு வாழ் மக்கள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கேரளாவிக்கு நிதியுதவியினை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதியிலிருந்து சுமார் 3.91 லட்சம் பேர் கேரளாவுக்காக நிதியுதவி அளித்துள்ளனர் என்றும் 14 நாள்களில் மட்டும் மொத்தமாக ரூ.713.92 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது என்ற தகவல் கடந்த 28-ம் தேதி வெளியானது.

தற்போது, மக்களிடமிருந்து வரும் நிவாரண நிதி மேலும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 30-ம் தேதி வரையிலும் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1,027.24 கோடி நிவாரண நிதியாக வந்துள்ளது.

கேரளா வெள்ள பாதிப்பிற்காக, முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 21 கோடி ரூபாய் நிவாரண உதவி வழங்கி உள்ளார்.

இன்று முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து காசோலையை நீதா அம்பானி வழங்கினார். மேலும் முகாம்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்