நிறைமாத கர்ப்பிணிக்கு ரத்தம் தேவை! 4 வயது குழந்தையை பேரம் பேசிய தந்தை

Report Print Deepthi Deepthi in இந்தியா

உத்திரபிரதேச மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணியின் சிகிச்சைக்கு பணம் தேவை என்பதற்காக 4 வயது குழந்தையை தந்தை விற்க முயன்றுள்ளார்.

அரவிந்த் பன்ஜாரா - சுக்தேவி தம்பதியினருக்கு 4 வயதில் ரோஷினி, ஒரு வயதில் ஜானு என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், சுக்தேவி மூன்றாவது முறையாக கர்ப்பமானார்.

7-வது மாதத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடுசெய்யும்படி கூறியுள்ளனர்.

ஏழ்மையில் இருக்கும் இவரால் சிகிச்சைக்காக ரத்தம் ஏற்பாடு செய்யவில்லை.

மனைவியின் சிகிச்சைக்கு பணமில்லாததால், வேறு வழியின்றி குழந்தையை 25,000 ரூபாய்க்கு விற்க முடிவுசெய்துள்ளார்.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அதைத் தடுத்து, அந்தப் பெண்ணுக்கு ஆகும் சிகிச்சைக்கான முழுச் செலவையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக திர்வா காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்