சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து தங்கிய வெளிநாட்டு இளம்பெண்: நேர்ந்த சோக சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த நெதர்லாந்தை சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தை சேர்ந்த லிண்டா ஹிலானா (24) என்ற பெண் கடந்த 27ம் திகதி சுற்றுலா விசா மூலம் சென்னை வந்தார்.

தி.நகரில் உள்ள தனியார் லாட்ஜில், தான் ஒரு பத்திரிகையாளர் என்று கூறி லிண்டா அறை எடுத்து தங்கினார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் லாட்ஜ் அறையை லிண்டா காலி செய்ய வேண்டிய நிலையில் அவர் அறை கதவுகள் வெகு நேரமாகியும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர் சுரேஷ் கதவை வெகுநேரமாக தட்டிய பின்னர் மாற்று சாவியை வைத்து திறந்தார்.

அப்போது லிண்டா வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் லிண்டா சடலம் அருகில் இருந்த மருந்து பாட்டிலை கைப்பற்றினார்கள்.

இது விஷ மருந்தா அல்லது போதை மருந்தா என்று ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்