அது பனியன் விளம்பரம்... அரசியல் கட்சி அல்ல: சாடும் சீமான்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தை ஆள்வதற்கு நடிகர் விஷால் நினைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த விழாவில் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை `மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசியல் என்பது பணம் சம்பாதிக்கும் இடமாக மாறிவிட்டது. நடிகனாகச் சம்பாதித்துவிட்டு குடும்பத்துடன் இருக்க முடியாது.

நிஜ வாழ்க்கையில் மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. அரசியல் என்பது மக்கள் பிரச்னையைத் தீர்ப்பதுதான் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நல இயக்கம் ஆரம்பித்துள்ள விஷால் தமிழகத்தை ஆள்வதற்கு நினைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசும்போது, இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது 20,000-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு இந்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறினார்.

அப்போது அவரிடம் விஷால் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான், அவர் பனியன் விளம்பரம்தான் பண்ணுறார்.

அவர் ஒன்னும் கட்சி ஆரம்பிச்சது மாதிரி தெரியல. ஒரு பனியன் எடுத்து காட்டுறார் அவ்வளவுதான். அவர் மக்கள் நல இயக்கம்தான் ஆரம்பிச்சிருக்கிறார்.

அது யாரு வேணும்னாலும் செய்யலாம். பெரியார் தேர்தலில் போட்டியிடாம, பதவிக்கு வராம மக்களுக்கு சேவை செய்தார். அதுபோல விஷால் செஞ்சா வரவேற்கலாம். அவரை இந்த மக்கள் வாழவைக்கிறார்கள்.

அதனால் அதை அவர் செய்வதில் தப்பில்லை. ஆனால், தமிழகத்தை ஆள வேண்டும் என நினைப்பது தவறு. தமிழகத்தை ஆள விஷால் நினைக்கக் கூடாது எனக் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்