நொடிக்கு நொடி மாற்றிப்பேசும் கமல்ஹாசன்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் அறிவித்தவுடன் வெற்றி பெறுவதற்கான பணிகள் தொடங்கும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்

மேலும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

அது அவருடைய கருத்து. ஒரு குடும்பத்தை எதிர்த்து அ.தி.மு.க-வில் மிகப்பெரிய தர்ம யுத்தம் நடத்திய பிறகு தொண்டர்களுடைய ஆதரவுடன் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

மீண்டும் கட்சியை ஒரு குடும்பத்திடம் ஒப்படைக்க கட்சியினர் தயாரில்லை" என்றவரிடம், இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி நடிகர் கமல் கருத்து தெரிவித்துள்ளது தொடர்பாக கேட்டதற்கு, அவர் நொடிக்கு நொடி தனது கருத்தை மாற்றிப் பேசி வருகிறார்.

பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் முடிவு செய்வார். அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்