மு.க ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்: அழகிரி பரபரப்பு அறிவிப்பு

Report Print Raju Raju in இந்தியா

மு.க ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் என மு.க அழகிரி அதிரடியாக கூறியுள்ளார்.

கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக-வின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திமுக-விலிருந்து நீக்கப்பட்ட மு.க அழகிரி தொடர்ந்து ஸ்டாலினை விமர்சித்து வந்தார்.

விரைவில் தனது பலத்தை நிரூபிப்பேன் என அழகிரி கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் அழகிரி அளித்துள்ள பேட்டியில், திமுகவில் மீண்டும் தம்மை சேர்த்துக் கொண்டால், மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத் தயார்.

கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்.

கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என அதிரடியாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்