கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்: அதிர்ச்சி காரணம்!

Report Print Vijay Amburore in இந்தியா

உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை 5 நாட்களுக்கு பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் Crossings Republik அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 25-ம் தேதி பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விரைந்து சென்ற பொலிஸார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு பின்னர் இறந்தவர் சஞ்சனா (30) என்பதை அடையாளம் கண்ட பொலிசார், காஸியாபாத் அருகே விஜயாநகர் பகுதியை சேர்ந்த ராஜீவ் (32) என்பவரின் மனைவி என்பதையும் கண்டறிந்தனர்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ராஜீவை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, மூன்று குழந்தைகளுக்கு தாயான சஞ்சனா கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து குற்றவாளி ராஜிவ் கூறுகையில், சம்பவம் நடந்த அன்று, பிறக்கவிருந்த குழந்தை பற்றி எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் நான் சஞ்சனாவை கத்தியால் குத்தினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பின்னர் ராஜிவ் மீது, இந்திய தண்டனை சட்ட பிரிவுப்படி 302(கொலை) மற்றும் 201(ஆதாரங்களை அழிக்க முயற்சித்தல்) கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்