வீடு முழுவதும் ரத்தக்கறை: சடலமாக கிடந்த 4 பேர்! அதிர்ச்சியடைந்த பொலிஸார்

Report Print Vijay Amburore in இந்தியா

அரியானா மாநிலத்தில் திறந்து கிடந்த வீட்டிற்குள் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் சடலமாக கிடந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் இருந்து 50கிமீ தூரத்தில் உள்ள பிரிஜ்புரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் Fulbati (62).

இவரது வீட்டில் பால் போடுவதற்காக வந்த பால்காரர் வீடு திறந்திருப்பதை பார்த்து உள்ளே சென்றுள்ளார். அங்கே வீடு முழுவதும் ரத்த கறைகள் படிந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக உள்ளுர் தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் இதுகுறித்து பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், வீட்டினுள் சென்று பார்க்கும்போது, Fulbati மற்றும் அவருடைய மகன் Manish (25) தரையில் சடலமாகவும், மருமகள் Pinki (24) தூக்கில் தொங்கிய நிலையிலும் சடலமாக கிடப்பதை பார்த்துள்ளனர்.

அதேசமயம் 1 வயதுடைய Fulbati-ன் பேத்தி அறையின் ஓரத்தில் காயங்களுடன் அழுதுகொண்டிருந்துள்ளார்.

இதனை பார்த்த பொலிஸார் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தரப்பில் தெரிவிக்கையில், இந்த கொடூரமான சமபவத்தில் Fulwati பலமாக தாக்கப்பட்டுள்ளார். 3 பேரும் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை.

குற்றவாளி யார் என்பது குறித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம் என தெரிவித்துள்ளனர்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்