பிரபல நடிகரின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததற்கு இது தான் காரணமா? வெளியான பரபரப்பு தகவல்கள்

Report Print Santhan in இந்தியா

பிரபல நடிகரின் தந்தையான நந்தமுரி ஹரிகிருஷ்ணா, காரை ஓட்டியபோது சீட் பெல்ட் அணியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை விலையுயரந்த காரில் சென்ற தெலுங்கு சூப்பர் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையான ஹரிகிருஷ்ணா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் எப்படி கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில் கார் ஓட்டிச் சென்ற, ஹரிகிருஷ்ணா சீட் பெல்ட் அணியவில்லை கார் கவிழ்ந்த அதிர்வால், அதன் கதவுகள் திறந்துள்ளன. அப்போது வெளியே தூக்கி வீசப்பட்ட ஹரிகிருஷ்ணா, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரானது சுமார் 150 கி.மீற்றர் வேகத்தில் சென்றுள்ளது. அவர் காரின் சீட் பெல்டை அணிந்திருந்தால் விபத்தின் பாதிப்பு குறைந்திருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஹரிகிருஷ்ண்டன் கார் 150 கி.மீற்றர் வேகத்தில் சென்ற போது, தண்ணீர் பாட்டிலை எடுக்க முயன்றுள்ளார்.

சாலையில் சிறு வளைவு அப்போது வந்துள்ளது, கடைசி நிமிடத்தில் வளைவில் சரியாக திருப்ப முற்பட்டார்.

ஆனால், கார் அந்த வேகத்தில் சென்றதால், உடனடியாக அதை சரி செய்ய முடியவில்லை. எனவேதான், சாலை தடுப்பில் கார் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது என்று பொலிசார் ஒருவர் கூறியுள்ளார்.

61 வயதான ஹரிகிருஷ்ணா, ஹைதராபாத்திலிருந்து, நெல்லூர் நோக்கி சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த சாலையில் உள்ள சிசிடிவி கெமராக்களை கொண்டு, கார் அதிவேகமாக சென்றதா என்பது உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்