உடுத்தியிருக்கும் உடையை தானே கிழித்து கொள்ளும் இளம்பெண்! 6 வருடங்களாக தந்தை கொடுத்த கொடூர தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மனச்சிதைவு ஏற்பட்டு உடைகளை கிழித்து கொண்ட இளம்பெண்ணை தந்தை ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவை சேர்ந்தவர் மங்களு. இவருக்கு பசந்தி (26) என்ற மகளும் மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் பசந்தியை கடந்த ஆறு ஆண்டுகளாக சங்கிலியில் கட்டி வைத்து வந்துள்ளார் மங்களு.

உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் இதை சமீபத்தில் கண்டுப்பிடித்த நிலையில் பொலிசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து பசந்தியை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

பின்னர் பொலிசார் மங்களுவிடம் விசாரித்தனர். அவர் கூறுகையில், பசந்தி தனது உடையை தானே கிழித்து கொண்டு எங்காவது அடிக்கடி ஒடிவிடுவாள்.

இதனால் அவள் பாதுகாப்பு கருதியே சங்கிலியில் கட்டி வைத்தோம் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்