தாலி கட்டிய மனைவியின் வாயில் எலி மருந்தை ஊற்றிய கணவன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தகாத உறவை தட்டிக் கேட்ட மனைவியை கணவன் உட்பட அவரது குடும்பத்தினர் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு திருஞானசம்பந்தம்(32) என்ற மகன் உள்ளார்.

திருஞான சம்பந்ததிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோதா(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் திருஞானசம்பந்திற்கு, அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகும் அளவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் மனைவியான வினோதாவிற்கு தெரியவந்ததால், அவர் உடனடியாக இது குறித்து கணவரிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, திருஞான சம்பந்தம் அந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த வினோதா கணவரிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திருஞான சம்பந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் வினோதாவின் வாயில் எலி மருந்தைஊற்றி கொலை செய்ய முயன்றனர்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வினோதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வினோதா தன் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து திருஞானசம்பந்தம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், திருஞானசம்பந்தத்தை மட்டும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்