எட்டே நாளில் ரூ.10 கோடி திரட்டிய இளைஞர்: கேரள பேரிடருக்கு குவியும் நிதியுதவி

Report Print Arbin Arbin in இந்தியா

அமெரிக்காவின் சிகாகோ நகரில் பணிபுரியும் இரு இளைஞர்கள் கேரள பேரிடருக்கு என திரட்டிய சுமார் 14 லட்சம் டொலர் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

சிகாகோ நகரில் பணிபுரியும் அருண் மற்றும் அஜோமோன் ஆகிய இருவரும் கேரள பேரிடருக்கு நிதியுதவி அளிக்கும்படி அங்குள்ள மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மட்டுமின்றி பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும், அங்குள்ள மக்கள் படும் அவஸ்தை குறித்தும் தொடர்ந்து பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இவர்களில் அயராத உழைப்புக்கு பலனாக வெறும் எட்டே நாட்களில் சுமார் 14 லட்சம் டொலர் தொகையை இளைஞர்கள் இருவரும் திரட்டியுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இணையம் வழி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்த தகவலை அறிந்த கேரள முதலமைச்சர் பினறாயி விஜயன், அவர்கள் இருவரையும் நேரிடையாக வந்து நிதியை கைமாறும் பொருட்டு கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து கேரளா சென்ற இருவரும் முதலமைச்சர் பினறாயி விஜயனை பார்த்து இந்திய மதிப்பில் சுமார் 9.8 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்