கேரள மக்களுக்காக கொடுக்கப்படவுள்ள 700 கோடி ரூபாயை இந்திய அரசு ஏற்காதா? வெளியான பரபரப்பு தகவல்

Report Print Santhan in இந்தியா

கேரளா மக்களுக்கு 700 கோடி ரூபாய் நிதியுதவியாக ஐக்கிய அரபு அமீரகம் கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை இந்திய அரசு ஏற்காது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கடந்த 11 தினங்களாக பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தில் இருக்கும் 12 மாவட்டங்கள் கடும் சேதங்களை சந்தித்தன.

இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் உடைமைகள், வீடுகள் போன்றவைகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கேரள மக்களுக்காக பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 700 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் செய்யப்பட உள்ளது. அந்நாடு துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் இதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த உதவியை இந்திய அரசு ஏற்பதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் கேரளாவின் இந்த நிலையைக் கண்டு ஐக்கிய அரபு அமீரகம் போலவே மற்ற நாடுகளும் நிதியுதவி அளித்துள்ளன.

ஆனால் இந்திய அரசு எந்த வெளிநாட்டின் நிதியுதவியை தற்போதைக்கு பெறவில்லை. இதன் இறுதி முடிவை வெளியுறவு அமைச்சகம் தான் எடுக்கும்.

மற்ற நாடுகளின் நிதியுதவியை பற்றியே இன்னும் இந்திய அரசு முடிவு எடுக்காத காரணத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நிதியுதவியை ஏற்குமா என்பது சந்தேகம் என கூறப்படுகிறது.

அதே சமயம் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் எவ்வளவு நிதியுதவி அளித்தாலும், அது ஏற்றுக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்