கேரள மக்களுக்காக 71 கோடியை நிதியாக கொடுத்த ரிலையன்ஸ் அறக்கட்டளை! நீத்தா அம்பானி சொன்ன வார்த்தை

Report Print Santhan in இந்தியா

கேரள மக்களுக்களின் நிவாரணத்துக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை 71 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுளின் நிவாரணத்துக்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை மொத்தம் 71 கோடி ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.21 கோடியும் ரூ.50 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியிருக்கிறது.

கேரளாவில் கடந்த சில தினங்களாம பெய்து வரும் கனமழையால், அம்மாநிலத்தின் சில மாவட்டங்கள் வெள்ளத்தில் முழ்கின.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் மழை குறையத் துவங்கிய போதும், வெள்ளநீர் வடியாததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

கனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 14-ஆம் திகதி முதல் வெள்ளம் பாதித்த இடங்களில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மீட்பு பணிகளை செய்து வருகிறது.

அரசுடன் இணைந்து இந்த பணிகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 21 கோடியை ரிலையன்ஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் வழங்கியிருக்கிறது.

இது குறித்து அறக்கட்டளையின் தலைவர் நீத்தா அம்பானி கூறுகையில், கேரளாவில் நம்முடைய சகோதரர்கள் மிகப் பெரிய துன்பத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்களுக்கு உதவுவது நம் கடமை. அதுமட்டுமல்லாமல் ஒரு கார்ப்பரேட் அறக்கட்டளைக்கு இதில் கூடுதல் பங்கு இருக்கிறது. அதனால் இந்த உதவியை செய்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்