மீண்டும் அழகிரியின் பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீண்டும் முக அழகிரி அளித்துள்ள பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுக கட்சி இரண்டாக உடையும் என தமிழக அரசியலில் ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் அழகிரி பேட்டி அளித்து பரபரப்பை கூட்டினார்.

ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகிய இருவருக்கும் இடையில் நடக்கும் பதவி பிரச்சனையே திமுக உடைவதற்கு காரணம் என கூறப்படுகிறது.

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்பக்கம் இருக்கிறார்கள் என மெரினாவில் வைத்து சமீபத்தில் பேட்டி அளித்தார் அழகிரி. இவரின் இந்த பேட்டி காரணமாக திமுக உடையப்போகிறது என்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வெளியானது.

இந்நிலையில் மீண்டும் பேட்டி அளித்து பரபரப்பை அதிகரித்துள்ளார் அழகிரி. அவர் கூறியதாவது,

கலைஞர் நினைவிடத்துக்கு வருகிற செப்டம்பர் 5-ந்தேதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள். கலைஞரின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை அமைதி பேரணியில் நிரூபித்து காட்டுவேன்.

தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கலைஞர் என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. அதை வெளியில் சொல்ல முடியாது. அவர் என்ன நினைத்தாரோ அதன்படி செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேட்டி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்